close
Choose your channels

பேட்மேன் ரிலீஸ் எதிரொலி: பெண்களுக்கு சத்யம் திரையரங்கின் சிறப்பு சேவை

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவான 'பேட்மேன்' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெண்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதோடு, இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் இன்று இந்த படம் வெளியாவதை முன்னிட்டு இன்று முதல் பெண்கள் டாய்லெட்டில் இலவச நாப்கின்களை திரையரங்கு நிர்வாகம் வைத்துள்ளது. இந்த புதிய சேவை முயற்சியை தொடங்கிய சத்யம் திரையரங்கிற்கு பெண்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதேபோன்ற சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்தால் திரைப்படம் பார்க்க வரும் பெண் ஆடியன்ஸ்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.