close
Choose your channels

'காலா'வின் வெற்றி அரசியல் களத்திலும் கிடைக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

Saturday, June 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காலாவின் வெற்றி அரசியல் களத்திலும் கிடைக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ரஜினியின் படம் சுமாராக இருந்தால்கூட அதை சமூக வலைத்தள பயனாளிகள் ட்ரோல் செய்து தோல்விப்படமாக மாற்றிவிடுவார்கள். ஆனால் 'காலா' படத்தின் வெற்றிக்கு சமூகவலைத்தள பயனாளிகள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிக்கு 'காலா'வுக்கு கிடைத்த வெற்றி அவரது அரசியல் கட்சிக்கும் கிடைக்குமா? என்று அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டனர். இந்த கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'நடிகர்களின் அரசியலை, படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது என்றும் அவ்ர்களுடைய வெற்றியை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார். அமைச்சர் கூறியதுபோல் 'காலா'வுக்கு கொடுத்த வெற்றியை, ரஜினியின் அரசியலுக்கும் மக்கள் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.