close
Choose your channels

'மாவீரன்' படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. என்ன கமெண்ட் போட்டிருக்காரு பாருங்க..!

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியில் பல திரையுலக பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படத்தை பாராட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ’மாவீரன்’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட இருக்கும் நிலையில் இந்த படத்தை சமீபத்தில் அமைச்சர் உதயநிதி பார்த்துள்ளார்.

இந்த படத்தை அவர் பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் ’சக்சஸ்’ என்பதை குறிக்கும் வகையில் தம்ஸ் அப் எமோஜிகளை பதிவு செய்து அதை சிவகார்த்திகேயனுக்கு டேக் செய்து உள்ளார்.

பொதுவாக உதயநிதி ஒரு படத்தை பார்த்து அந்த படம் வெற்றி பெறும் என்பதை முன்பே கணித்து விடுவார். அந்த வகையில் இந்த படத்திற்கு அவர் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்ததை அடுத்து இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.