close
Choose your channels

செம ஸ்டைலான மாஸ் கெட்டப்பில் தல தோனி… வைரல் புகைப்படம்!

Friday, July 30, 2021 • தமிழ் Sport News Comments

“கேப்டன் கிங்“ தல தோனி அவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் தல தோனியின் ஒவ்வொரு அசைவையும் மாஸ் வைரலாக்கிவிடும் அவர்களுடைய ரசிகர்கள் சமீபத்தில் வெளியான தோனியின் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் படு வைரலாக்கி வருகின்றனர்.

ஐபிஎல் 2020 போட்டியில் கலந்து கொண்ட தோனி அதற்குபின் வேறெந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் எடுத்த ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஃபரா கான் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் யூத் கெட்டப்பில் இருக்கும் தல தோனி படு ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் அமீரத்தில் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அமீரகம் செல்ல உள்ளனர். இவர்களை விளையாட்டை காண கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz