close
Choose your channels

உதயநிதிக்காக தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த இசையமைப்பாளர்

Friday, January 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக மாஸ் நடிகர்களின் படங்களில் தரலோக்கல் பாடல் இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு படத்திலும் தரலோக்கல் பாடல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

'மனிதன்' வெற்றி படத்தை அடுத்து உதயநிதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'சரவணன் இருக்க பயமேன்'. சமீபத்தில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் எழில் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், உதயநிதிக்காக தரலோக்கல் பாடல் ஒன்றை கம்போஸ் செய்து ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர்கள் பென்னி தியோல் மற்றும் சுனிதி செளஹான் பாடியுள்ளனர். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமார் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.