close
Choose your channels

விவாகரத்தான மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் வழக்கு: என்ன காரணம்?

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது விவாகரத்தான தனது மனைவி மீது முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும், அந்த வகையில் எனது மனைவியும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்றும், இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை என்றும் அறிவித்திருந்தார். டி இமான் - மோனிகா ரிச்சர்ட்ஸ் தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் டி இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார். தங்களுடைய குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக டி இமான் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos