close
Choose your channels

நானும் ரெளடிதான்' டீசர் விமர்சனம்

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த படம் காமெடி கலந்த ஆக்ஷன் படம் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. ஒரு ரெளடிக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பதை விளக்கும் படமாகவும் இது இருக்கும் என்பதும் இந்த டீசர் புரிய வைக்கின்றது.

விஜய்சேதுபதி தனது வழக்கமான பாணியில் காமெடி கலந்து ரெளடி கேரக்டரில் நடித்திருப்பதும், ஆனந்த்ராஜ் சீரியஸ் ரெளடியாகவும், இவர்களுக்கு சிம்மசொப்பனமாக போலீஸ் கேரக்டரில் ராதிகாவும் நடித்துள்ளனர் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா காது கேட்கும் திறன் இல்லாதவராக நடித்திருப்பதும், மற்றவர்களின் உதட்டு அசைவை வைத்தே அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் கேரக்டரில் நடித்துள்ளதாக வெளிவந்த செய்தியை இந்த டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு முழு நீள ஆக்சன் படமாக இல்லாமல் காமெடி கலந்த ஒரு படமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருப்பது டீசரில் இருந்து தெளிவாக தெரிகிறது. இயக்குனருக்கு அனிருத்தின் பின்னணி இசை கண்டிப்பாக ஒரு பெரிய பக்கபலமே என்பதும் ஒரு ஜாலியான ஆக்ஷன் படமாக இந்த படம் இருக்கும் என்பதே இந்த டீசர் விளக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.