close
Choose your channels

'பாபநாசம் 2' படத்தில் கமல் ஜோடியாக இந்த நடிகையா? அப்ப மீனா இல்லையா?

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான ’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திலும் கமல் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் ’பாபநாசம்’ படத்தில் கமல் ஜோடியாக கௌதமி நடித்து இருந்த நிலையில் ’பாபநாசம் 2’ படத்தில் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்த மீனாவே ’பாபநாசம் 2’ படத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென மீனா இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது

அதற்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக இந்த படத்தில் நதியா நடிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 90களில் முன்னணி நடிகையாக நதியா இருந்தபோது ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தபோதிலும் அவர் கமல்ஹாசனுடன் மட்டும் தான் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்முறையாக கமலுக்கு ஜோடியாக நதியா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.