close
Choose your channels

கருணாஸ், வாகை சந்திரசேகருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து.

Friday, May 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் போன்ற பெருந்தலைகள் தோல்வி அடைந்த போதிலும் கருணாஸ், வாகை சந்திரசேகர் ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏக்களாக பதவியேற்கவுள்ள இருவரையும் நடிகர் சங்கம் வழ்த்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
''தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களில் தொடங்கி இன்றுவரை பலரும் மக்களுக்கு கலைப்பணியாற்றி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அதுபோல நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸும், வேளச்சேரி தொகுதியில் நடிகர் வாகை சந்திரசேகரும் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்கி திரைத்துறைக்கும் பெருமை சேர்த்து, மேலும் பல நிலைகளுக்கு உயர வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துகிறது''
இவ்வாறு நடிகர் சங்கம் தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.