close
Choose your channels

'பிரேமம் ரீமேக்கில் 'வேதாளம்' நடிகை

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்படுவது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் நிவின்பாலி கேரக்டரில் நாக சைதன்யாவும், சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் 'வேதாளம்' நாயகி ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாய்பல்லவி வேடம் கல்லூரி பேராசிரியர் வேடம் என்பதால் ஸ்ருதிஹாசன் இந்த கேரக்டருக்காக இப்போதே தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த கேரக்டரை தெலுங்கிலும் அவரே நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Chandoo Mondeti இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'மஞ்சு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.