பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,May 19 2018]

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பதும், அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் தமிழில் பிக்பாஸ் 2 ஒளிபரப்பாகின்றது என்பதும் இந்த நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சிக்கான டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் இந்தமுறை தெலுங்கில் தொகுத்து வழங்குபவர் ஜூனியர் என்.டி.ஆர் இல்லை. அவருக்கு பதிலாக 'நான் ஈ' படம் உள்பட பல படங்களில் நடித்த நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேலும் விரைவில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' ரன்னிங் டைம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் முழுவேகத்தில் நடந்து வருகிறது.

மரணம் அடைந்த ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்

பிரபல நடிகர் சிம்பு, தனது ரசிகர்களின் மேல் அளவற்ற அன்பு வைத்துள்ளவர் என்பது தெரிந்ததே.

ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன்: ஆர்.ஜே பாலாஜி அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருந்தார் என்பது தெரிந்ததே.

தனுஷின் அடுத்த படம் ரிலீஸ் எப்போது?

கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டிருக்கும் தனுஷ், 'ராஜண்ணா' மற்றும் ஷமிதாப் படங்கள் மூலம் அகில இந்திய ஸ்டாராக மாறினார்.

'இரும்புத்திரை' இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

விஷால், சமந்தா  நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.