close
Choose your channels

ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன்: ஆர்.ஜே பாலாஜி அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருந்தார் என்பது தெரிந்ததே. புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக வெளிவந்த சுவர் விளம்பரம், கட்சி கொடி குறித்த அவரது டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு, மதிமுக தலைவர் வைகோவுடன் அவருடைய சந்திப்பு ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அடுத்த கட்ட பயணம் குறித்த தகவலை இன்று இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த சஸ்பென்ஸ் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஆம், நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி கடந்த சில நாட்களாக ஆர்.ஜே.பாலாஜி செய்த பில்டப் அவரது அடுத்த படத்திற்காகத்தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன், திரைப்படத்தின் வாயிலாக என்று ஆர்ஜே பாலாஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் 'LKG' என்றும்,. ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. பிரபு இயக்கும் இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் இசையமைக்கின்றார். விது அய்யன்னா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.