close
Choose your channels

தனுஷின் அடுத்த படம் ரிலீஸ் எப்போது?

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டிருக்கும் தனுஷ், 'ராஜண்ணா' மற்றும் ஷமிதாப் படங்கள் மூலம் அகில இந்திய ஸ்டாராக மாறினார். தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் சர்வதேச நடிகராகவும் மாறிவிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்திற்கு தமிழில் 'வாழ்க்கையே தேடி நானும் போனேன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில நாவல் ஒன்றினை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை Ken Scott இயக்கியுள்ளார். தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர். சோனி நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.