close
Choose your channels

'இரும்புத்திரை' இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிஜிட்டல் மயத்தால் ஏற்படும் ஆபத்துக்களை பாமரரும் அறியும் வகையில் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த படம் விஷாலின் வெற்றிப்படங்களில் ஒன்றாகியுள்ளது

இந்த நிலையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் சிலரே விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில் மித்ரனின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் மித்ரன், 'எனது அடுத்த படம் குறித்து பேசும் நேரம் இதுவல்ல. நான் தற்போது இரும்புத்திரை வெற்றியை கொண்டாடி வருகிறேன். எனது அடுத்த படத்திற்கான கதை தயார் செய்தவுடன் அதுகுறித்த தகவல்களை நானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.