close
Choose your channels

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திடீர் மாற்றம்

Saturday, May 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திடீர் மாற்றம்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பதும், அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் தமிழில் பிக்பாஸ் 2 ஒளிபரப்பாகின்றது என்பதும் இந்த நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சிக்கான டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் இந்தமுறை தெலுங்கில் தொகுத்து வழங்குபவர் ஜூனியர் என்.டி.ஆர் இல்லை. அவருக்கு பதிலாக 'நான் ஈ' படம் உள்பட பல படங்களில் நடித்த நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேலும் விரைவில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.