விக்னேஷ் சிவனுடன் கோவா டூர் சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் தனி விமானம் மூலம் கேரளா சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள் என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் மேலும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த காதல் ஜோடி தற்போது கோவாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. கோவா பீச்சில் நயன்தாராவின் விதவிதமான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியானதை அடுத்து சற்றுமுன் நயன்தாரா வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் தான் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்னும் ஒரு சில நாட்களில் இருவரும் கோவாவின் இயற்கை அழகை ரசித்துவிட்டு சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னரே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது