close
Choose your channels

நடிகை நீலிமா இசை வீட்டிற்கு வந்த லிட்டில் இளவரசி: குவியும் வாழ்த்துக்கள்!

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான நீலிமா இசை தனது வீட்டிற்கு லிட்டில் இளவரசி வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தவர் நீலிமா இசை. மேலும் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமானார்.

இந்த நிலையில் தனக்கு ஜனவரி 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் எங்கள் வீட்டிற்கு லிட்டில் இளவரசி வந்து எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளார் என்றும் உங்கள் அனைவரது ஆசிர்வாதம் அந்த குழந்தைக்கு தேவை என்றும் நீலிமா இசை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.