close
Choose your channels

'எங்க வீட்ல அடுப்பு இல்லை என தாமரை கூறியது பொய்யா? வைரல் புகைப்படம்

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த சமையல் போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது.

இதனை அடுத்து வெற்றி பெற்ற புளூ டீமில் உள்ள தாமரை, அக்சரா, சிபி மற்றும் அபினய் ஆகியோர்களுக்கு கேஸ் ஸ்டவ் பரிசு வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ’எங்க வீட்டில் அடுப்பு இல்லை’ என தாமரை துள்ளிக்குதித்து சந்தோசமடைந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தாமரையின் பழைய புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். அதில் தாமரை வீட்டில் புத்தம் புதிய கேஸ் அடுப்பு இருப்பது போல் உள்ளது. அப்படி என்றால் தாமரை, ‘எங்கள் வீட்டில் அடுப்பு இல்லை என்று கூறியது பொய்யா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.