close
Choose your channels

என்.ஜி.கே புதிய அப்டேட்: தயாரிப்பாளர் தகவலால் ரசிகர்கள் குஷி

Monday, December 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் செல்வாரகவன் உடல்நலம் உள்பட ஒருசில பிரச்சனைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் கசிந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் இன்று முதல் 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இம்மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா ஒரு மெலடி பாடலை ஒலிப்பதிவு செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

‪#NGK Final Schedule‬??

A post shared by Prabhu (@prabhu_sr) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.