close
Choose your channels

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவுடன் 'கோ 2', ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ஆகிய படங்களில் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். மேலும் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'துள்ளாத மனமும் துள்ளும்' உள்பட பல படங்களை இயக்கிய எழில் இயக்கும் படம் ஒன்றிலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்.


இந்த படத்தில் நிக்கி கல்ராணி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றில் நிக்கி கல்ராணியின் விரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிக்கி கல்ராணி கூறியபோது, 'இந்த படத்தில் நான் கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றேன். ஒரு சண்டைக்காட்சியின் படப்பிடிப்பில் விரலில் ஹேர்லைன் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டைக்காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சி என்பதால் டூப் இல்லாமல் நடித்தேன். மீண்டும் உடல்நலம் பெற்றவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.