close
Choose your channels

முதல்முறையாக சசிகுமாருடன் இணையும் பிரபல நடிகை

Monday, February 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு சசிகுமார் நாடித்த 'அசுரவதம்' திரைப்படம் மட்டுமே வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் கடந்த பொங்கல் தினத்தில் வெளிவந்த 'பேட்ட' படத்தில் ரஜினியின் நண்பராக சிறு கேரக்டரில் நடித்த சசிகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்தது

இந்த நிலையில் சசிகுமார் தற்போது 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர் இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தற்போதைக்கு 'சசிகுமார் 19' என்று அழைக்கப்படுகிறது. செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் இசையமைப்பாளராக சாம்சிஎஸ், எடிட்டராக சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராக சித்தார்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முதல்முறையாக பிரபல நடிகை நிக்கிகல்ராணி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.