கமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்!
’பாபநாசம்’ திரைப்படத்தின் கமலஹாசனின் மகளாக நடித்த நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் வெளியான ’தர்பார்’ திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து தனது உருக்கமான நடிப்பில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்
இந்நிலையில் அவர் தற்போது அஜித் படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
இந்த படத்தில் அஜித் கேரக்டரில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சாரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தில் இரண்டு பெண் கேரக்டர்களில் அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா ஆகிய நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் நிவேதா தாமஸ்க்கு ஒரு பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது