close
Choose your channels

அஜீத்துடன் மீண்டும் இணையும் 'வீரம்' நடிகர்

Wednesday, October 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல் என பல்வேறு திறமைகளை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவெளியில் அஜீத் போட்டோகிராபியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களில் நடித்த நடிகர் அப்புக்குட்டியை வித்தியாசமான தோற்றத்தில் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் அசத்தினார் என்பதை பார்த்தோம். அப்புக்குட்டியே அவருடைய புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த நிலையில், அஜீத் தற்போது நடித்து வரும் 'வேதாளம்' படத்தில் அப்புக்குட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜீத் ரசிகர்களுக்கு இதுவரை கிடைத்திராத புதிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புக்குட்டி ஏற்கனவே அஜீத்துடன் 'வீரம்' படத்தில் நடித்திருந்தாலும் அஜீத்தின் போட்டோஷுட்டிற்கு பின்னர் வெளியாகவுள்ள இந்த படத்தில் அப்புக்குட்டியின் கெட்டப் எப்படி இருக்கும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.