close
Choose your channels

மீண்டும் இணைகிறது 'ஒருகல் ஒருகண்ணாடி' கூட்டணி!

Wednesday, January 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கிய ’ஒருகல் ஒருகண்ணாடி’ என்ற படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா நடித்த திரைப்படம் ‘ஒருகல் ஒருகண்ணாடி’. இந்த திரைப்படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார் என்பதும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’காப்பான்’ என்ற திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார் என்பதும் அதன் பின் தற்போது ’துருவ நட்சத்திரம்’ மற்றும் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம் ராஜேஷ் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைவதை அடுத்து இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடல்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.