close
Choose your channels

'ஒரு குப்பைக் கதை' படத்தின் ஓப்பனிங் வசூல் நிலவரம்

Monday, May 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமான 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் படத்திலேயே நடிகராக தினேஷும், இயக்குனராக காளி ரெங்கசாமியும் வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 16 திரையரங்குகளில் 81 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.19,36,449 வசூல் செய்துள்ளது. மேலும் ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு 75% பார்வையாளர்கள் இருந்தது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சின்ன பட்ஜெட் படமான 'ஒரு குப்பை கதை' திரைப்படம் சராசரி வசூல் செய்தாலே வணிக ரீதியான வெற்றிப்படம் என்பதால் இந்த படமும் வெற்றிப்பட பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.