close
Choose your channels

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு மறக்காமல் வாழ்த்து சொன்ன 'பாண்டியன் ஸ்டோர்' பிரபலம்..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாண்டியன் ஸ்டோர்’ தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவருடைய பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்’ உட்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் சின்னத்திரை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் சித்ராவை இன்னும் ரசிகர்கள் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர் குழுவினரும் மறக்கவில்லை என்பது அவரது பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை தெரிவித்ததில் இருந்து தெரியவருகிறது. நேற்று அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் நினைவு வைத்து சமூக வலைதளங்களில் சித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் சிவ சேகர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா’ என சித்ராவின் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களும் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.