close
Choose your channels

ஒத்த செருப்பு இசை வெளியீடு: கமலுக்கு கொடுத்த செங்கோலில் டுவிஸ்ட்!

Sunday, May 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து வரும் திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசனுக்கு பார்த்திபன் ஒரு வெள்ளி செங்கோல் ஒன்றை நினைவுப்பரிசாக கொடுத்தார். இந்த செங்கோல் டார்ச்லைட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் டார்ச்லைட் சின்னத்தையே வெள்ளி செங்கோலாக செய்து அவருக்கு நினைவுப்பரிசை பார்த்திபன் வழங்கியதுதான் இந்த விழாவின் டுவிஸ்ட்.

ஒரே ஒரு சிங்கிள் கேரக்டர் மட்டுமே படம் முழுவதும் தோன்றும் படம் தான் 'ஒத்த செருப்பு'. இதேபோல் தனது ஃபேவரேட் நடிகர் டாம் ஹார்டி நடித்த 'லாக்கி' என்ற படம் ஒரே நடிகர் மட்டுமே நடித்தது என்று கமல் பேசும்போது குறிப்பிட்டார். ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.