close
Choose your channels

'இறைவி'யில் நடனம் ஆடும் பிரபல இசையமைப்பாளர்

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்களை அடுத்து இன்னொரு இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் மேலும் ஒரு இசையமைப்பாளரும் நடிகராக மாறவுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', இளையதளபதி விஜய்யின் 'விஜய் 60', தனுஷின் கொடி, உள்பட சுமார் ஒரு டஜன் படங்களுக்கும் இசையமைத்து வருபவர் சந்தோஷ் நாராயணன். இப்போதைய நிலையில் கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர் இவர்தான். இந்த பிசியிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படத்தில் ஒரு பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடவுள்ளாராம். இந்த படத்தில் தனது நடனத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு 'இறைவி' படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.