close
Choose your channels

மே 25 ரிலீசில் இருந்து விலகிய அடுத்த திரைப்படம்

Tuesday, May 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது மே 25ஆம் தேதி ஜிவி பிரகாஷின் 'செம', அதர்வாவின் 'செம போத ஆகாதே', பரத் நடித்த 'பொட்டு', தன்ஷிகாவின் 'காலக்கூத்து' உள்பட 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதர்வாவின் 'செம போத ஆகாதே' திரைப்படம் ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளி போனது என்பதை சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் பரத் நடித்த 'பொட்டு' திரைப்படமும் இந்த போட்டியில் இருந்து தற்போது விலகியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'மே 25ஆம் தேதியில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் தங்கள் படத்திற்கு குறைவான திரையரங்குகளில் குறைவான காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாகவும், புதிய ரிலீஸ் தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிக்கவுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

பரத், இனியா, நமீதா, ஸ்ருஷ்டி டாங்கே, மனிஷா யாதவ், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், ஷகிலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திர்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கியுள்ளார். இவர்தான் தற்போது சன்னிலியோன் நடித்துவரும் 'வீரமாதேவி' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.