close
Choose your channels

'பாகுபலி 2' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

Saturday, March 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் மோடி போன்ற விவிஐபிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடும் அளவுக்கு இந்த படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
'பாகுபலி'யை கட்டப்பா கொல்ல என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள நிச்சயம் முதல் பாகத்தை பார்த்த அனைவரும் இந்த படத்தை பார்ப்பார்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு குறிப்பிட்ட ஒருசில திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த டிரைலர் யூடியூப் இணையதளத்தில் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.