close
Choose your channels

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படத்தின் படப்பிடிப்பு பூஜை.. ஹீரோயின், வில்லன் யார்?

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ’எல்ஐசி’ அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ’லியோ’ உள்பட பட வெற்றி படங்களை தயாரித்த லலித்தின் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இனி படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் ’லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் உடன் அவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.