close
Choose your channels

அழகில், இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய மாமியார்....! அதுவும் பிரபல சீரியலில் நடித்தவர்....!

Thursday, August 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரவீனா நாயரின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய 18 வயதில் சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தான் நடிகை பிரவீனா. முதன்முதலாக மலையாளத்தில் "கௌரி" படம் மூலம் அறிமுகமானவர், கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமா வாழ்க்கையில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட இவர் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதன்பின்பு சின்னத்திரைக்கு தாவிய பிரவீனா. கலைஞர் சேனலில் "நம்ம குடும்பம்" சீரியல் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இதைத்தொடர்ந்து விஜய்டிவி, சன்டிவியில் பல ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமானார். சன்- டிவியில் வெளியான "பிரியமானவளே" தொடர் இவரை அடுத்த நகர்வுக்கு கொண்டு சென்றது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் "ராஜா ராணி" சீரியலில் கோபக்கார மாமியாராக நடித்து வருகிறார்.

பிரவீனாவின் கணவர் பேங்க் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினரும் கூட. இந்நிலையில் பிரவீனாவின் இளமை கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் செம்ம மாடர்ன் லுக்கில் அவர் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.