close
Choose your channels

தொடை காட்டுவது எங்கள் ஜீனிலேயே உள்ளது. பிரியங்கா சோப்ரா பதிலடி

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்து பேசினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

அவற்றில் ஒரு புகைப்படம் பிரியங்காவின் தொடை தெரியும்படி இருந்ததாகவும், ஒரு நாட்டின் பிரதமர் முன் பிரியங்கா இதுபோன்று மரியாதையில்லாத வகையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தொடை தெரியும்படி உட்காரலாமா? என்றும் பலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பினர்

தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பிரியங்கா சோப்ரா தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பிரியங்காவும் அவருடைய தாயாரும் தொடை தெரியும் வகையில் உடை அணிந்து உட்கார்ந்துள்ளனர். இந்த பதிவில் இது எங்கள் ஜீனிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரியங்காவின் இந்த பதிலடியை ஒருசிலர் ரசித்தும், ஒருசிலர் கண்டனம் தெரிவித்தும் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.