close
Choose your channels

ரஜினி உருவப்பொம்மை எரிப்பு: சென்னையில் பதட்டம்

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை இன்னும் அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், வந்தால் வரட்டும் என்றும், வந்தால் தான் அரசியலில் உள்ள கஷ்டம் அவருக்கு புரியும் என்றும் பல தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், 'சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்வதாகவும், கீழ்த்தரமான இந்த விமர்சனங்களால் தனக்கு வருத்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களை அவர் கீழ்த்தரமானவர்கள் என்று எப்படி சொல்லலாம் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அம்பத்தூரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ரஜினிக்கு எதிராக கோஷமிட்ட போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவபொம்மை எரித்தவர்களை எச்சரித்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், 'ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரஜினி வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பதட்டம் நிலவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.