தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான விஷ்ணுவிஷாலின் சைக்கோ த்ரில்லிங் படமான 'ராட்சசன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதேபோல் தமிழில் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற சைக்கோ த்ரில்லிங் படங்கள் குறித்து இதோ ஒரு பார்வை:

1.சிகப்பு ரோஜாக்கள்:

1.சிகப்பு ரோஜாக்கள்:

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான த்ரில்லிங் படம். 3D வசதி இல்லாத 1978ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் ஒருசில காட்சிகள் 3D போன்று உருவாக்கப்பட்டிருக்கும். சிறுவயதில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஹீரோ, வரிசையாக இளம்பெண்களை கொல்வதும் அதன் முடிவும் தான் இந்த படத்தின் கதை.

2. மூடுபனி:

2. மூடுபனி:

கடந்த 1980ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரதாப்போத்தன், ஷோபா நடிப்பில் இளையராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுவயதில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பினால் நாயகன் வரிசையாக கொலை செய்யும் ஒரு சைக்கோவாக மாறிய கதைதான் இந்த படம்.

3. டிக் டிக் டிக்:

 3. டிக் டிக் டிக்:

கடந்த 1981ஆம் ஆண்டு பாரதிராஜா-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்த படத்தில் மாதவி, ராதா, ஸ்வப்னா என்ற மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.. அந்த காலத்திலேயே துணிச்சலாக மூவரும் நீச்சலுடையில் நடித்த படம். ஒரு சைக்கோ வில்லன் இளம்பெண்களை வரிசையாக கொலை செய்வது ஏன்? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

4. நூறாவது நாள்:

4. நூறாவது நாள்:

மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். ஆட்டோ சங்கர் உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் திரைக்கதை கச்சிதமாக இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் அவர்களை கொலை செய்து சுவரில் புதைக்கும் சைக்கோ கலந்த த்ரில் படம் தான் நூறாவது நாள்

5. ஊமைவிழிகள்:

5. ஊமைவிழிகள்:

1986ஆம் ஆண்டு ஆபாவாணன் கதை,வசனம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு த்ரில் படம். இந்த படமும் இளவயதில் ஒரு பெண் தன்னை ஏமாற்றிய காரணத்தால் அந்த பெண்ணின் அழகிய கண்கள் போல் உள்ள பெண்களை தேர்வு செய்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதை. விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், சந்திரசேகர், அருண்பாண்டியன், ரவிச்சந்திரன், உள்பட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்கியிருந்தார்.

6. ஆளவந்தான்:

6. ஆளவந்தான்:

கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து காலம் கடந்து கொண்டாடப்படும் படம் ஆளவந்தான். ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை பயன்படுத்தியது இந்த படத்திற்குத்தான். கடந்த 2016ஆம் ஆண்டு 'Fantastic Fest' என்ற திரைப்பட திருவிழா அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த விழாவில் 'ஆளவந்தான்' திரையிடப்பட்டபோது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான இந்த படம் குடும்ப வன்முறை குழந்தைகளை சைக்கோவாக எப்படி மாற்றும் என்பது அருமையாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

7. வாலி:

7. வாலி:

அஜித், சிம்ரன், நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தம்பி மனைவியை அடைய நினைக்கும் ஒரு மாற்றுத்திறனாளி சைகோவின் நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை. இந்த படம் அஜித்துக்கு ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

8. காதல் கொண்டேன்:

8. காதல் கொண்டேன்:

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. தாங்கிக் கொள்ள முடியாத அன்பையும், அந்த அன்பு நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வெறுப்பால் சைக்கோ ஆகும் ஹீரோவின் கதைதான் இந்த படம். இந்த படம் தான் தனுஷை தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது.

9. வேட்டையாடு விளையாடு:

9. வேட்டையாடு விளையாடு:

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் செய்யும் சைக்கோ கொலைகள் குறித்து அலசப்பட்டிருக்கும்.

10. இருமுகன்:

10. இருமுகன்:

கொஞ்சம் கூட கருணையே இல்லாத கொடூரன் லவ் தனது தொழிலுக்காக செய்யும் விதவிதமான சைக்கோ கொலைகள் தான் இந்த படத்தின் கதை. விக்ரம், நயன்தாரா நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கிய இந்த படம் சுமாரான வெற்றி அடைந்தாலும் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது.

11. ராட்சசன்:

11. ராட்சசன்:

விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் 'முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த இந்த படமும் சிறுவயதில் தனது அகோர உருவத்தை கேலி செய்ததால் சைக்கோவாக மாறிய ஒருவன் செய்யும் தொடர் கொலைதான் இந்த படத்தின் திரைக்கதை. 'சிறப்பான திரைக்கதையும், கதையை நகர்த்திய விதமும் இந்த படம் 'சைக்கோ த்ரில்லர்' படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளியன்று வெளியான விஷ்ணுவிஷாலின் சைக்கோ த்ரில்லிங் படமான 'ராட்சசன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.