close
Choose your channels

இந்தியிலும் வசூல் சாதனை செய்த 'புஷ்பா': பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது என்பதும் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ஒரு சில நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி வசூலை குவித்தது

ஏற்கனவே தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான நேரடி பாஇவுட் படங்களான ’சூரியவன்ஷி’ மற்றும் ’83’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில் டப்பிங் படமான ‘புஷ்பா’ திரைப்படமும் 100 கோடி வசூல் செய்துள்ளது பாலிவுட் திரையுலகினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

அதுமட்டுமின்றி மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியில் இந்த படம் வியாபாரம் ஆனதை அடுத்து ஓடிடியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ‘புஷ்பா’ வெற்றியை அடுத்து பான் - இந்தியா ஸ்டாராக அல்லு அர்ஜுன் உயர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.