close
Choose your channels

தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து!

Monday, August 2, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

8 வயதில் பேட்மிண்டன் விளையாட துவங்கிய பி.வி.சிந்து வெறும் 26 வயதிலேயே, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்றுள்ளார். இதனால் மகளிர் தனிநபர் விளையாட்டு பிரிவில் இருமுறை தொடர்ந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் கடந்த 2019 உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனால் உலகச் சாம்பியன் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்ற பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

1995 ஜுலை 5 ஆம் தேதி பிறந்த பி.வி.சிந்து சிறிய வயதிலேயே பேட்மிண்டன் விளையாட துவங்கி விட்டார். இவரது பெற்றோர் சர்வதேச கால்பந்து வீரர்கள் என்பதால் இவருக்கும் விளையாட்டின் மீது அலாதியான ஆர்வம் இருந்துள்ளது.

தனது தந்தை செகந்திராபாத்தில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில் விளையாடும்போது இவர் அருகில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பயிற்சியில் கலந்து கொள்வராம். இப்படி ஆரம்பித்த பி.வி.சிந்து இந்தியாவிற்காக பதக்கங்களை குவிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டியிருக்கிறார். இதற்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்ட அவர் இந்தப் பதக்கங்கள் எதுவும் எளிதில் கிடைத்து விடவில்லை என்பதையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட பி.வி. சிந்து கடந்த 2009இல் சப்-ஜுனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பிறகு தனது 18 வயதில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகச் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு முதல் சர்வதேச வெண்கலப் பதக்கம் வென்றார்.

பின்னர் 2017, 2018 என இரு தடவை உலகச் சாம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இவர், இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2019 உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற பி.சி.சிந்து தங்கப்பதக்கதை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்ததார். இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்து.

ஒலிம்பிக் வரிசை-

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் தற்போது 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறார். இதனால் தொடர்ந்து இருமுறை பதக்கங்களை குவித்துள்ளார். தற்போது டோக்கியோவில் தங்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களை ஏமாற்றாமல் வெண்கலம் வென்றுள்ளேன். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கு முன்பு தனது செல்போன் 3-4 மாதங்கள் வரை பறிக்கப்பட்டு விட்டது. ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட நான் இழந்திருந்தேன். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இதேபோன்று கடுமையாக முயற்சித்தேன். இதனால் பாரிஸில் மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிடமாட்டேன் என்றும் சிந்து கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்குமுன்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக தனிநபர் பிரிவுகளில் நார்மன் பிரிட்சார்ட், சுஷில் குமார் என இருவரும் தொடர்ந்து இருமுறை பதக்கங்களை குவித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது பி.வி.சிந்து இணைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.