close
Choose your channels

ஹரிஷ்கல்யாண்-ரைசா படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் 

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் இந்த படத்தின் பாடல்களும் வெளியானது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்திம் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'பியார் பிரேமா காதல்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. இதே தேதியில்தான் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா, ரேகா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், மணிகுமரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.