close
Choose your channels

விசா வாங்குவதற்காக வெளிநாட்டவரை திருமணம் செய்த ரஜினி பட நாயகி!

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெளிநாட்டிற்கு அடிக்கடி செல்லும்போது எளிதில் விசா வாங்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக ரஜினி பட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ என்ற திரைப்படத்தின் நாயகி ராதிகா ஆப்தே. இவர் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து இளைஞர் பெனட்டிக் டைலர் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராதிகா ஆப்தே திருமணம் செய்து கொண்டார்.

தனது திருமணம் குறித்து ராதிகா ஆப்தே கூறிய போது திருமணம் செய்வதில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு நபரை திருமணம் செய்தால் எளிதில் அடிக்கடி வெளிநாடு செல்லும் தனக்கு எளிதில் விசா கிடைக்கும் என்றும் அதற்காகத்தான் பெனட்டிக் டைலர் என்பவரை திருமணம் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

பெனட்டிக் டைலர் அவர்களை திருமணம் செய்தாலும் நான் என் வேலைக்காக இந்தியாவில் தான் பெரும்பாலும் உள்ளேன் என்றும் அவ்வப்போது அவசியம் ஏற்படும் போது மட்டும் கணவரை சந்திக்க இங்கிலாந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.