close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் ராதிகா மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்: என்ன காரணம்?

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான நடிகை ராதிகா, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ராதிகா தனது உடல் எடையை கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே இருப்பதாக திரையுலகினர் கூறுவதுண்டு.

இந்த நிலையில் ராதிகாவை போலவே அவருடைய மூத்த மகள் ரேயானும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கட்டுக்கோப்பான உடலமைப்பை மெய்ண்டன் செய்து வருகிறார். ராதிகாவின் மூத்த மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யூ என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ராதிகாவின் மகள் ரேயான் சிறந்த மனைவியாகவும் தாயாகவும் மகளாகவும் இருந்து வருவதோடு தற்போது உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இரண்டாம் குழந்தை டெலிவரி ஆவதற்கு சில நாட்களுக்கு முன் எடுத்த உடல் எடை அதிகமாக இருந்த புகைப்படத்தையும், டெலிவரிக்கு பின் டயட், உடற்பயிற்சி ஆகியவைகளால் அனைவரும் ஆச்சரியப்படும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தையும் ரேயான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இரண்டு புகைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.