close
Choose your channels

'சிங்கம் 3' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு தேதி

Monday, January 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய வெற்றி படங்களை அடுத்து 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இவ்வாரம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு ஒன்றை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் தனது சமுக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

'சிங்கம் 3' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 7ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும், சூர்யா-ஹரியின் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டிலை அதுவரை யூகித்து வையுங்கள் என்றும் ரசிகர்களுக்கு இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


எனவே இந்த படத்திற்கு 'சிங்கம் 3' என்ற டைட்டில் இல்லாமல் வேறு புதிய டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக இந்த அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த டைட்டில் என்ன என்பதை தெரிந்து கொள்ள வரும் 7ஆம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.