close
Choose your channels

தீபாவளிக்கு வெளியாகிறது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிப்பில் இயக்குனர் ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’லட்சுமி பாம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் இந்த படம் ஓடிடி ரிலீஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரின் இறுதியில் நவம்பர் 9ஆம் தேதி தீபாவளி விருந்தாக இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அக்ஷய்குமார் ரசிகர்கள் இந்த படத்தை தீபாவளி விருந்தாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.