close
Choose your channels

ராகவா லாரன்ஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்!

Friday, August 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கோலிவுட் திரையுலகில் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதும் அவர் தற்போது ’ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ’சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’துர்கா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அதிரவைக்கும் அளவில் இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதூ. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’துர்கா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.