close
Choose your channels

கடலில் வலை வீசி மீன்பிடித்து, நீச்சல் அடித்து அசத்திய ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பி யான ராகுல் காந்தி எளிமையான மனிதர்களுடன் இணைந்து பழகுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இவர் நாடு முழுவதும் எளிமையான மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளார்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல் காந்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். அதோடு கிராமத்து சமையில் யூடியூப் சேனலும் இணைந்து காளாண் பிரியாணி சமைத்து சாப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் அவர்களுடன் சகஜமாக உரையாடி பலரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இவர் மீனவர்களுடன் இணைந்து கடலில் வலை வீசி மீன் பிடித்து இருக்கிறார். அந்த நேரத்தில் மீனவர்கள் படகை விட்டு கடலில் குதித்து வலையை சரிசெய்து இருக்கின்றனர். இதுகுறித்து விசாரித்த ராகுல் நானும் அதைச் செய்கிறேன் என திடீரென கடலில் குதித்து விட்டார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் பயந்து உள்ளனர். ஆனால் சிறிதும் அலட்டிக் கொள்ளாத ராகுல் காந்தி மீனவர்களோடு சேர்ந்து கடலில் நீச்சல் அடித்து உற்சாகத்துடன் காட்சி அளித்தார். இந்தப் புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது.

கேரளாவின் வயநாடு தொகுதியின் எம்.பியான ராகுல் காந்தி தன்னுடைய தொகுதிக்கு அடிக்கடி செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கேரளாவில் சட்டச்சபைத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நேரத்தில் கொல்லம் மீனவர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் மீன்பிடித்தும் கடலில் நீச்சல் அடித்தும் அவர்களுடன் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.