close
Choose your channels

'சிவா' படத்தில் நடிக்கும் முன் ரஜினியின் வழக்கமான 10 நாள் விசிட்

Sunday, October 13, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் இந்த பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்தது. 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு 10 நாள் பயணமாக சென்றுள்ளார்.

இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் இமயமலையின் அடிவாரமான உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்லவிருப்பதாகவும், அங்கிருந்து அவர் காரில் கேதார்நாத் பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வழக்கமாக அவர் செல்லும் பாபா குகைக்கும் சென்று தியானம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சுமார் 10 நாட்கள் ரஜினிகாந்த் இமயமலை பயணம் செய்ய உள்ளதாகவும் அதன் பிறகு சென்னை திரும்பும் அவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து மீண்டும் இமயமலை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz