close
Choose your channels

தீபாவளிக்கு முன்பே ரஜினியின் '2.0' படக்குழு தரும் செம விருந்து

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.

'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 3D டெக்னாலஜியில் உலகமெங்கும் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பே அதாவது ஆயுதபூஜை திருநாளான செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் நிச்சயம் ஆயுதபூஜை திருநாள் கொண்டாட்ட விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் டீசர் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும், இசை வெளியிட்டு விழா டீசர் மற்றும் டிரைலர் வெளியீடுகளுக்கு இடையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.