close
Choose your channels

தமிழ் சினிமா வரலாற்றில் 'கபாலி'க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

Sunday, May 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத பெருமை ஒன்று தற்போது இந்த படத்திற்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'கபாலி' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மலேசிய தமிழர்கள் உள்பட மலேசியாவில் உள்ள மலாய் மொழி பேசும் மக்களும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பெருமளவு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மலாய் பேசும் ரஜினி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் மலாய் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் ஒரு படம் மலாய் மொழியில் டப் செய்யப்படுவது இதுவே முதல்முறை. மலாய் மொழியில் இந்த படத்தை 'மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேசன்' என்ற நிறுவனம் உரிமை பெற்று டப் செய்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மலாய் மொழியில் 'கபாலி' டீசர் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.