close
Choose your channels

'பாகுபலி 2' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

Sunday, May 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் 2ஆம் பாகமான 'பாகுபலி' 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை வரும் 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படமும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.