close
Choose your channels

அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்: தம்பியை வரவேற்ற கமல்ஹாசன்

Wednesday, July 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அன்றைய சரித்திரம் மீண்டும் அதை நினைவுறுத்துவோம், தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கிறேன் என தனது அடுத்த பட அறிவிப்பை கமல்ஹாஸன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பை தற்போது கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த வீடியோ அறிவிப்பில் ’அன்றைய சரித்திரம் மீண்டும் அதை நினைவுறுத்துவோம், தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.