close
Choose your channels

பாபிசிம்ஹாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை

Saturday, August 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது 'அக்னிதேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2' பட இயக்குனர் ஜான்பால்ராஜ், ஷாம் சூர்யாவுடன் இணைந்து இயக்கி வருகிறார்.

பிரபல க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் பாபிசிம்ஹாவுடன் சதீஷ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரம்யா நம்பீசனுக்கு இந்த படத்தில் இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடம் என்றும் அவருடைய கேரக்டர் இந்த படத்தின் ஹைலைட் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.